திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (12:25 IST)

சஞ்சய் மஞ்சரேக்கரின் விருப்ப அணி… ஜடேஜாவுக்கு இடமில்லை!

நாளை இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை விளையாட வேண்டிய தனது விருப்ப அணியின் பட்டியலை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பாக விளையாடி வரும் ஆல் ரவுண்டர் ஜடஜாவுக்கு அவர் இடம் அளிக்கவில்லை. ஏற்கனவே ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் எனக் கூறி அவர் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரியை அணியில் சேர்த்துள்ளார்.