1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (08:21 IST)

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறதா? பிசிசிஐ விளக்கம்

India
இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் தொடர் நடத்தப்படவில்லை என்பதும், உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன் வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
 
இந்தியா பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த சாத்தியமே இல்லை என்றும் போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்ததாக வெளியான தகவல் தவறானது என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது