விராத் கோஹ்லியை சொல்லி வச்சு தூக்கிய டிரெண்ட் போல்ட்!

Last Modified ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (13:33 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விராட் கோலியை அவுட் ஆக்கவே களம் இறங்குகிறேன் என்று சவால்விட்டு அணியில் இடம் பெற்றவர் பிரபல நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட். இவரது பந்துவீச்சு டெஸ்ட் போட்டி அனல் பறக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்களும் கூறினார்கள்
இந்த நிலையில் விராட் கோலியை வீழ்த்துவேன் என்று சபதமிட்ட டிரென்ட் போல்ட் அவர் கூறியபடியே இன்று விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இன்று இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பிபி ஷா மற்றும் புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி விட, மயங்க் அகர்வால் 58 ரன்கள் அடித்தார்

இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 2 ரன்களில் அவுட்டான விராட் கோலி இந்த இன்னிங்சில் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 ரன்களில் அவுட் ஆக்கினார். அவரது விக்கெட்டை சொன்னது போலவே டிரென்ட் போல்ட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது என்பது ரஹானே 25 ரன்களுடனும் விஹாரி 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :