1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Chris gayle and A B devilliers were invited to see finals

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

பஞ்சாப் கிங்ஸ்
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த 18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவையிரண்டுமே இதுவரைக் கோப்பையை வெல்லாத அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இந்த இரு அணிகளுக்குமே சமமான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் பெங்களூர் அணியில் கோலி இருப்பதால் அந்த அணி நீண்டகாலமாக கோப்பையை வெல்லாததாலும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தரவாய்ப்புள்ளது.

இந்நிலையில் பெங்களூர் அணிக்காகப் பல ஆண்டுகளாக விளையாடி அந்த அணிக்கு இவ்வளவு அதிக ரசிகர்கள் கிடைக்கக் காரணமாக இருந்த கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் இறுதிப் போட்டியைக் காண நரேந்திர மோடி மைதானத்துக்கு வரவுள்ளனர். அவர்கள் பெங்களூர் அணியால் அழைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?