வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (22:22 IST)

வெற்றி பெறும் நிலையில் நியூசிலாந்து: கோப்பையை கைப்பற்றுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் நியூசிலாந்து அணி 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது 
 
தற்போது அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் இன்னும் 39 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால் கண்டிப்பாக அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது