திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (09:59 IST)

இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியாவுக்குப் பதிலாக மற்றொரு வீரர் சேர்ப்பு

prasith krishna
உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியாவுக்குப் பதிலாக மற்றொரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை-2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.

இத்தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடி வருகின்றனர்.

சமீபத்தில்  நடந்த போட்டியில் இந்திய அணி 357 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 55 ரன்கள் ஆல் அவுட் ஆகி மிக மோசமான தோல்வியடைந்தது. இப்போட்டியில்  இந்திய பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடினர். எனவே இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில்  இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில்   புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.