செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (15:38 IST)

உலகக்கோப்பைக்கான அணி அறிவிப்பு – ரன்னர்ஸ் வின்னர்ஸ் ஆவார்களா ?

இங்கிலாந்தில் அடுத்தமாதம் நடைபெற உலகக்கோப்பைத் தொடருக்கான நியுசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மே மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 வரை நடைபெற இருக்கிறது. உலகககோப்பைக்காக அணிகள் தயாராக ஆரம்பித்துள்ளன. இதையடுத்து இப்போது உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் நியுசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

கே என் வில்லியம்ஸன் தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நியுசிலாந்து அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்து அணி
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லேதம், கொலின் மன்ரோ, டாம் பிளண்டல், ஜிம்மி நீஷம், கொலின் டி கிராண்ட் ஹோம்,  மிட்செல் சாண்ட்னர்,  இஷ் சோதி, டிம் சவுதி, மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.