திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 மார்ச் 2018 (17:41 IST)

உலகக் கோப்பைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை கைவிட்ட அதிரடி பேட்ஸ்மேன்

நியூசிலாந்து அணியில் அதிரடி வீரர் கொலின் முன்றோ இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என முடிவு செய்துள்ளார்.

 
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கொலின் முன்றோ அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து டி20 ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
 
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றும் வரும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளார்.
 
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட தன்னை தயார்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.