இப்படியும் ஒரு சாதனையா: அஷ்வின் அபாரம்!!
ஒரு ஆண்டில் கிரிக்கெட்டில் அதிகமுறை பந்து வீசி சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்திய அணியின் தற்போதைய சுழல் பந்துவீச்சாளர்களில் முன்னிலை வகிப்பவர் அஸ்வின். இந்நிலையில் ஒரு ஆண்டில் அதிக முறை பந்து வீசிய இந்திய சுழல் பந்துவீச்சாளர்களில் முதல் இடம் பிடித்துள்ளார் அஸ்வின்.
2016/17ம் ஆண்டில் மட்டும் 3,701 பந்துகள் அதாவது 616.5 ஓவர்கள் வீசியுள்ளார். முன்னதாக இந்த சாதனை படைத்திருந்த அனில் கும்ளே 2004/05ம் ஆண்டில் 3,673 பந்துகள் (612.1 ஓவர்கள்) வீசி இருந்தார்.
கும்ளேவின் சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார். முன்றாவது இடத்தில் வினோ முன்கட் 1952/53ம் ஆண்டு 3662 பந்துகள் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.