திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (12:48 IST)

மன்கட் அவுட் முறை வேண்டாம்… ஆனால் இதை செய்யலாம் – முரளிதரனின் சூப்பர் ஐடியா!

சன் ரைஸர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் முத்தையா முரளிதரன் மன்கட் அவுட் முறை பற்றி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இது குறித்த சர்ச்சை இன்று வரையிலும் நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் இலங்கை பந்துவீச்சாளரும் தற்போதைய சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான முத்தையா முரளிதரன் இதுகுறித்து பேசியுள்ளார். அவரின் பேச்சில் ‘பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை அவ்ட் ஆக்குவதில் நியாயமற்ற முறைகள் இருக்கக் கூடாது. பேட்ஸ்மேன்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பின்னரும் பேட்ஸ்மேன் தவறு செய்வதாக நினைத்தால் நடுவர் அணிக்கு 5 ரன்களை குறைத்து தண்டனை வழங்கலாம்’ எனக் கூறியுள்ளார்.