செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (08:36 IST)

யுவ்ராஜ் தந்தையின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர்!

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் கடந்த சீசன் முழுவதும் அவரை விளையாட வைகக்வே இல்லை. இந்நிலையில் இந்த சீசனில் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எந்த போட்டியிலும் அவர் முழுமையாக 4 ஓவர்கள் பந்துவீசவே இல்லை. அதன் பின்னர் அவருக்கு கடைசியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரை ஒரு நிலக்கரிச் சுரங்கம் என்றும் அதைத் தோண்டினால் வைரம் கிடைக்காது என்றும் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியிருந்தார். இது கிரிக்கெட் உலகில் பெரியளவில் சர்ச்சைகளை உருவாக்கியது.

இந்நிலையில் தற்போது ரஞ்சிக் கோப்பையில் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். ரஞ்சித் தொடரில் கோவா அணிக்காக விளையாடும் அவர் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். 9 ஓவர்கள் வீசிய அவர் 5 விக்கெட்களை வீழ்த்தி 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் அருணாச்சல பிரதேச அணி 84 ரன்களில் சுருண்டது.