திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (16:57 IST)

515 பந்துகளில் 1045 ரன்கள்; மும்பை மாணவன் சாதனை

மும்பையில் 14வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியில் பள்ளி மாணவர் ஒருவர் ஒரே போட்டியில் 1045 ரன்கள் சாதனை படைத்துள்ளார்.

 
மும்பையில் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களிடையே நவி மும்பை கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் லெவன் அணி சார்பாக தனிஷ்க் கவாத் என்ற மாணவன் 515 பந்துகளில் 1045 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.  
 
இரண்டு நாட்கள் களத்தில் நின்ற தனிஷ்க் கவாத் 149 பவுண்டரி, 67 சிக்ஸருடன் 1045 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பந்தாரி கோப்பை போட்டியில் பிரணவ் தனவதே என்ற மாணவன் 1009 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. தற்போது தனிஷ்க் கவாத் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
 
இந்த போட்டி தொடருக்கு மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் அங்கீகாரம் அளிக்காததால் இந்த சாதனை அங்கீகரிக்கப்படவில்லை.