1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 8 மே 2017 (23:28 IST)

மும்பை அணிக்கு மூன்றாவது தோல்வி. ஐதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்திருந்த மும்பை அணி, இன்றைய போட்டியில் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.



 


டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால் ஐதராபாத் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் நிலைத்து ஆடி 67 ரன்கள் எடுத்தார்.

139 ரன்கள் எடுத்தால் வெ\ற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி, இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் வார்னரின் விக்கெட்டை இழந்தபோதிலும் அதன்பின்னர் தவான் மற்றும் ஹென்ரிகுவிஸ் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியால் ஐதராபாத் அணி 7 வெற்றிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது.