திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (15:06 IST)

மருத்துவமனையின் அலட்சியத்தால் கோமா நோயாளியின் கண்களை கடித்த எலி

மும்பையில் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் கண்ணை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பால் தக்கரே அரசு மருத்துவமனையில்  பர்மிந்தர் குப்தா(27) என்ற இளைஞர் விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். விபத்து ஏற்பட்டு மூளையில் ரத்தம் உறைந்து விட்டதால், கோமா நிலைக்கு சென்றார்.
 
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டார்.  குப்தாவின் தந்தை மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான எலிகள் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கோமாவில் இருந்த குப்தாவின் கண்களை, எலிகள் கடித்துள்ளன. இதனால் அவருக்கு கண்களில் ரத்தம் வந்துள்ளது. அடுத்த நாள் காலையில் இதனை பார்த்த, குப்தாவின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகமும் இதுகுறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.