1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (04:42 IST)

மும்பையை 3 ரன்களில் வீழ்த்திய புனே: கடைசி வரை த்ரில் ஆட்டம்

முதலில் பேட்டிங் செய்த புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது.



 


161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில் 3 விக்கெட்டுக்களை இழந்து 14 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் புனே அணியின் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.