செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:28 IST)

கொல்கத்தா அணிக்கு 156 ரன்கள் இலக்கு கொடுத்த மும்பை!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் குவின்டன் டி காக் மிக அபாரமாக விளையாடி 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா 33 ரன்களும், பொல்லார்டு 21 ரன்களும் எடுத்துள்ளனர் 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புள்ளி பட்டியலில் மும்பை அணி நான்காவது இடத்தில் உள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் ஒரு இடம் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கொல்கத்தா அணி இன்று வெற்றி பெற்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது