1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:22 IST)

மும்பை பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றம்: சென்செக்ஸ் 60 ஆயிரத்தை நெருங்கியது!

கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் முதலீட்டாளர்கள் மிகுந்த லாபத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்துள்ளது. சற்றுமுன் வரை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 825 புள்ளிகள் உயர்ந்து 59,764.79 என்ற புள்ளிகளை தொட்டது புதிய சாதனையை ஏற்படுத்தியது. இன்னும் ஒரு சில புள்ளிகள் உயர்ந்து விட்டால் சென்செக்ஸ் 60 ஆயிரத்தை தொட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 280 புள்ளிகள் உயர்ந்து 17,828 என்ற புள்ளியில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் பல மடங்கு லாபம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது