ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Updated : வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:50 IST)

ஐபிஎல்-21 ;மீண்டும் கேப்டனாக ’ஹிட்மேன்’ ரோஹித்!

ஐபிஎல் 14 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதுவரை மும்பை அனி 8 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. கொரொனா காலத்தில்  இரண்டாவது கட்டமாக நடந்த முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றதால் மும்பை இன்று வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

 ரோஹித் சர்மா இன்று ஆடுவாரா கேப்டனாகக் களமிறங்குவாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், இதுவரை கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 5 தோல்விகள் பெற்று 6 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளதல் இந்த அணியும் வெற்றி பெற வேண்டியநிலையில் உள்ளது.