வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (15:14 IST)

ஐபிஎல் 2020: ஆமீரகம் பறந்த மஞ்சள் ஹீரோக்கள்!!

ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பு விமானத்தில் ஆமிரகம் புறப்பட்டுள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. 
 
இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணி வீரர்கள் அமீரகம் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
 
இதையடுத்து கடந்த வாரம் சென்னை வந்து பயிற்சி மேற்கொண்ட சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பு விமானத்தில் ஆமிரகம் புறப்பட்டுள்ளனர். தோனியுடன் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, சாஹர், அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னையில் இருந்து கிளம்பினர். 
 
மேலும், ஹர்பஜன் சிங் மற்றும் சிஎஸ்கே-வின் வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக அணியினரோடு இணைவார்கள் என தெரிகிறது.