திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (16:14 IST)

விக்கிரவாண்டியில் சிக்கியப் பணம் – ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் !

விக்கிரவாண்டியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் 17.8 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை  5 மணியளவில் விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த சோதனையில் கார் ஒன்றில் இருந்து  ரூ.17. 80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. காரில் இருந்தவர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக நகை வாங்கப் பணம் எடுத்துச் சென்றதாக சொன்னாலும் அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் 5.6 கிலோ மதிப்புடைய 25 மற்றும் 10 கிராம் எடை கொண்ட வெள்ளிக்காசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.