செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manikcam (Murugan)
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (14:22 IST)

வெளியான புகைப்படம் ; ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த த்ரிஷா

தன் ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் த்ரிஷா. 


 

 
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் படம் ‘96’. கும்பகோணத்தை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில், டிராவல் போட்டோகிராபராக விஜய் சேதுபதியும், ஸ்கூல் டீச்சராக த்ரிஷாவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், 96 வயது முதியவர் வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், ஒரு குழந்தையுடன் த்ரிஷா இருக்கிறார். அந்த புகைப்படத்தைப் பார்த்த படக்குழுவினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
“ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது மகிழ்ச்சி தான். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவது, கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு வேதனையை அளிக்கிறது. இனிமேல் யாரும் அப்படிச் செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார் த்ரிஷா.