திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:25 IST)

நீல நிற புதிய 50 ரூபாய் நோட்டு : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.


 
 
அதன் பின்னர் 500 மற்றூம் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
 
மேலும், புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது புதிய 50 ரூபாய் நோட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தைல் பகிரப்பட்டு வருகிறது.
 
2000 ரூபாய் நோட்டை போல நீல நிறம் கொண்டுள்ள புதிய 50 ரூபாய் நோட்டு புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளிவரும் இந்த ரூபாய் நோட்டின் பின்புறம், தென்னிந்திய கோயில் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால், இது புகைப்படத்தை குறித்தும் செய்தியை குறித்தும் ரிசர்வ் வங்கி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.