1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (12:42 IST)

மைக் டைசனிடம் சிக்கிய நபர்… விமானத்தில் வைத்து கொடூரத் தாக்குதல்… பின்னணி என்ன?

உலக குத்துச் சண்டை போட்டிகளின் ஜாம்பவான் வீரரான மைக் டைசன் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர்.

உலகக் குத்துச் சண்டை போட்டிகளில் கலக்கியவர் முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். போட்டியின் போது கொடூரமாக சக வீரர்களை தாக்கும் மைக், சக வீரர் ஒருவரின் காதையும் கடித்துள்ளார். இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் இப்போது ஓய்வு பெற்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படமான லைகரில் கூட அவர் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது அவர் விமானத்தில் ஒரு நபரை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த நபர் எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக மைக் டைசனை சீண்டியதால் கோபமான டைசன் இவ்வாறு நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.