இந்திய அணியினர் என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர் – இங்கிலாந்து வீரர் சரண்டர்!

Last Updated: புதன், 20 ஜனவரி 2021 (11:21 IST)

இந்திய அணியினர் தொடரை வென்று தன் முகத்தில் கரியைப் பூசிவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்ட்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு தோல்வியடைந்ததை அடுத்து தொடரை 4-0 என்ற கணக்கில் தோற்கும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அணி ரஹானே தலைமையில் சிறப்பாக விளையாடி தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து இப்போது தனது கணிப்பு பொய்யானது குறித்து மைக்கேல் வான் ‘அடிலெய்ட் தோல்விக்குப் பின்னரே நான் இந்தியா 4-0 என்ற கணக்கில் தோற்கும் என்று கணித்தேன். அணித்தேர்வுச் சிக்கல்கள், காயங்கள் ஆகியவற்றினால் இந்தியாவின் ஒற்றைப்பார்வை ரசிகர்கள் கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இந்திய அணி சிறப்பாக விளையாடி என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர். ஆஸி. அணியின் பலவீனங்களை இந்தியா அம்பலப்படுத்தி விட்டது.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :