இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட்: சூதாட்டத்தில் ஈடுபட்ட புக்கி கைது!

siva| Last Updated: புதன், 20 ஜனவரி 2021 (10:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முடிவடைந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று வரலாற்று சாதனை செய்தது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் இந்திய அணி வீரர்களுக்கு ரூபாய் 5 கோடி போனஸ் பரிசாக வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போட்டியில் கடைசி நேரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக பெங்களூரு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து நேற்று அதிரடியாக சோதனை செய்யப்பட்டதில் கிரிக்கெட் புக்கி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவரிடமிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவரிடம் யார் யார் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் கட்டினர் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய புக்கி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :