1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (14:03 IST)

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை படிப்படியாக குறைக்க வேண்டும்: மெரில்போன் கிரிக்கெட் கிளப் பரிந்துரை

cricket
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என ஐசிசிக்கு மெல்போன் கிரிக்கெட் கிளப் பரிந்துரை செய்துள்ளது.
 
2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் படிப்படியாக ஒருநாள் போட்டிகளை குறைக்க வேண்டும் என ஐசிசிக்கு இங்கிலாந்து நாட்டின் புகழ் பெற்ற மெல்போன் கிரிக்கெட் கிளப் பரிந்துரை செய்துள்ளது. 
 
உலகம் முழுவதும் ஐபிஎல் போன்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றும் இந்த தொடர்களை அட்டவணையை கையாள கிரிக்கெட் வாரியங்கள் ஒருநாள் போட்டி தொடரால் தவித்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது. 
 
ஒரு நாள் போட்டிகளை குறைப்பதன் மூலம் இந்த அட்டவணை சிக்கலை சரி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. உலககோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை குறைக்க வேண்டும் என்று மெல்போன் கிரிக்கெட் கிளப் பரிந்துரை செய்துள்ளதை ஐசிசி ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva