நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி: உடற்பயிற்சி செய்யும்போது காயம் என தகவல்
பாரதிராஜா இலக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்தி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் கார்த்திக் நேற்று தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி செய்யும் போது திடீரென கீழே விழுந்ததாகவும் இதனை அடுத்து அவருடைய காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவருடைய பிஆர்ஓ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே நடிகர் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும் அதே இடத்தில்தான் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் கார்த்திகி அவர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அதன்பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் பிஆர்ஓ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நடிகர் கார்த்திக் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்