ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் – அசத்திய இந்திய பந்துவீச்சாளர்

Last Updated: திங்கள், 17 டிசம்பர் 2018 (09:17 IST)
நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பேகர் தொடரில் மனிப்பூரைச் சேர்ந்த ரெக்ஸ் சிங் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் ஒரே பவுலர் வீழ்த்துவது என்பது அத்திப் பூத்தது போன்றதுதான். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலிலேயே ஒன்றிரண்டு முறை மட்டும் நடைபெற்றிருக்கும் சாதனை இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் அந்த சாதனையை மனிப்பூரை சேர்ந்த 18 வயது இடதுகை மிதவேக பவுலரான ரெக்ஸ் சிங் அனாயசமாக செய்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிரான கூச் பேகர் போட்டித் தொடரில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.


இதேப் போன்றதொரு சாதனையை ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சிகே நாயுடு 23 வயதிற்கானக் கோப்பைத் தொடரில் பாண்டிச்சேரியை சேர்ந்த சிதாக் சிங் என்பவர் மனிப்பூருக்கு எதிராக நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 இதில் மேலும் படிக்கவும் :