1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (20:34 IST)

கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்ட பட்லர்!

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய திரிபதி மற்றும் பட்லர் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கினர்.
 
பட்லர் 3வது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் குவித்துள்ளது. திரிபதி ரசல் வீசிய 5வது ஓவரில் 27 ரன்களில் வெளியேறினார்.