எங்களின் மோசமான தோல்வி – ஆர்.சி.பி கேப்டன் கோஹ்லி அதிருப்தி !

Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:19 IST)
நேற்று ஹைதராபாத் அணிக்கெ எதிரான படுதோல்வியை அடுத்து கேப்டன் விராட் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆர்.சி.பி. அணிக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகத் தொடங்கியுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி & கோ இன்னும் வெற்றியையே சுவைக்கவில்லை. அந்த அணியின் பவுலர்கள் வரிசையாக சொதப்புவதால் அணி படுபாதாளத்தில் இருக்கிறது.

நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கெதிரானப் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆர் சி பி யின் தோல்விக்கு டாஸ் வென்றும் முதலில் பேட் செய்யாதது ஒரு முக்கியக்காரணமாகக் கூறப்பட்டது. தோல்விக்குப் பின் பேசிய விராட் கோஹ்லி ’இந்த தோல்வியைப் பற்றி விளக்குவது கடினம். எங்களின் மோசமான தோல்வியாக இதுவே இருக்கும். எதிரணி எங்களை விட எல்லாத்துறையிலும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் முன்னாள் சாம்பியன் என்பதை நிரூபித்து விட்டனர்.

இமாலய இலக்கைத்துரத்தும் போது நாங்கள் தொடக்க ஓவர்களில் ரன்குவிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் நான் 3 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டேன். நானும் டிவில்லியர்ஸும் சேர்ந்து விளையாடி இருந்தால் ஆட்டத்தில் சமநிலை இருந்திருக்கும். நாம் வெற்றி பெறுவதற்கான கணங்களை உருவாக்க வேண்டும். அடுத்த போட்டி அத்தகையப் போட்டியாக இருக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :