1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (19:36 IST)

தவானை பாராட்டிய கோலி: உலகக்கோப்பை இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும்!!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்த தவானை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.


 
 
முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தவான் 71 பந்தில் சதம் அடித்து அதிரடி காட்டினார். 
 
இது குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி பேசியதாவது, கடந்த 3 மாதங்களாக தவான் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கடைசி வரை களத்தில் நிற்கிறார். 
 
2019 உலக கோப்பைக்கு இன்னும் 24 மாதங்கள் இருந்தாலும் அணியை தற்போது முதலே தயார் படுத்த திட்டமிட்டு உள்ளோம்.  அணியில் ஏராளமான மாற்றங்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.