திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 டிசம்பர் 2020 (17:31 IST)

இந்திய வீரர்களைப் பாராட்டிய கோலி… ரஹானேவைப் பாராட்ட மறுத்த கவாஸ்கர்!

இந்திய அணியினரை கேப்டன் கோலி பாராட்டும் விதமாக டிவிட்டரில் டிவீட் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து இன்று பாக்சிங் டே போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் பூம்ரா மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் 195 ரன்களுக்குள் ஆஸி அணி ஆல் அவ்ட் ஆனது.

அதையடுத்து பேட் செய்த இந்தியா ஆட்டமுடிவில் 36 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் இழந்திருந்தது. இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியைப் பாராட்டும் விதமாக கோலி ‘ சிறப்பான நாளாக அமைந்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். முதல் நாள் ஆட்டத்தை நன்கு முடித்துள்ளார்கள்’ எனக் கூறியிருந்தார்.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள கவாஸ்கர் ‘நான் ரஹானேவின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டமாட்டேன்.  ஏனென்றால் நான் ஏதாவது சொன்னால் மும்பைக் காரரை பாராட்டுகிறேன் எனக் குற்றம் சொல்வார்கள்’ எனக் கூறியுள்ளார்.