செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (17:31 IST)

அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்? சுவாரஸ்யமான ஆய்வு முடிவுகள் !

இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

செம்ரஷ் என்ற இணையதளம் கிரிக்கெட் வீரர்களில் அதிகமாக தேடப்பட்ட இந்திய வீரர் யார் என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி 16.2 லட்சம் முறை தேடப்பட்டு முதல் இடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடத்தில் இந்திய அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் ரோஹித் ஷர்மாவும் நான்காம் இடத்தில் தோனியும் உள்ளனர்.
ஜார்ஜ் மெக்கே, ஜோஷ் ரிச்சர்ட்ஸ், ஹார்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் மேத்யூஸ், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார்கள்.