வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2017 (11:51 IST)

தோனியுடன் மோதல்?? கோலி கூறுவது என்ன?

இந்திய கேப்டன் கோலிக்கும் முன்னாள் கேப்டன் தோனிக்கும் இடையே மறைமுக மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ளார் கோலி. 


 
 
சமீபத்திய பேட்டி ஒன்றின் போது, கோலியிடம் தோனியுடனான நட்புறவு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு கோலி பின்வருமாரு பதில் அளித்தார், எனக்கும் தோனிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்த நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். 
 
ஆனால், இது தொடர்பான செய்திகளை நாங்கள் இருவரும் கண்டுகொள்வதில்லை. எங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பவர்கள், எங்களை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். 
 
சில சமயங்களில் அப்படி எங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கே தெரியாது. தோனியுடனான எனது நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என கூறினார்.
 
அதே போல், தோனியை எதிர்த்து பல விமர்சனங்கள் வந்தாலும் கோலி அவரை விட்டுக்கொடுப்பதில்லை. நடந்த முடிந்த நியூசிலாந்த போட்டியின் தோல்விக்கு தோனிதான் காரணம் என பல விமர்ச்சித்தாலும், கோலி, தோனி தன்னால் முடிந்ததை செய்தார். ஆனால் டார்கெட் மிக அதிகம் என்பதால் அதனை எட்டுவது சிரமமாக மாறியது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.