திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (08:44 IST)

கோலியின் டயட்டில் முட்டை… நெட்டிசன்கள் கொந்தளிப்புக்கு பதில்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் அசைவ உணவுப் பழக்க முறையில் இருந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த தனது தினசரி உணவில் முட்டை இருக்கும் எனக் கூறியிருந்தார். இதைப்பார்த்த பலரும் ‘நீங்கள் வேகன் என சொல்லிவிட்டு முட்டை மட்டும் சாப்பிடலாமா?’ எனக் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

அதற்கு பதிலளித்த கோலி ‘நான் எப்போதும் என்னை vegan என சொல்லிக்கொண்டது இல்லை. Vegetarian என்றுதான் சொன்னேன். கொஞ்சம் அமைதியாகுங்கள். உங்களுக்கு பிடித்ததை உண்ணுங்கள்’ எனப் பதிலளித்துள்ளார்.