1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (13:00 IST)

மன்னித்துவிடுங்கள், தொடர்ந்து ஆதரவு தாருங்கள் – கோஹ்லி உருக்கம் !

ஆர்.சி,பி. அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெங்களூர் அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்,

ஐபில்-ன் தனது கடைசி லீக் போட்டியை இன்று விளையாட உள்ளது பெங்களூர் அணி. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ஐபிஎல் தொடரைத் தொடங்கிய நிலையில் மோசமான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

இதனால் ஆர்.சி.பி. அணி தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் தங்கள் அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளனர்.

டிவில்லியர்ஸ் ‘உங்களுக்கு எங்கள் நன்றி.. இந்த வருடம் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக அமைந்தது. அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்…. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை அளியுங்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கோஹ்லி ’இந்த சீசனின் கடைசிப் போட்டி. உங்களுக்கும் எங்களுக்கும் மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. நீங்கள் ஆடுகளத்தில் அமர்ந்து எங்களை உற்சாகப்படுத்தினீர்கள். சந்தேகமில்லாமல் நீங்கள்தான் ஐபிஎல்-ன் சிறந்த ரசிகர்கள்.’ எனப் பேசியுள்ளார்.