ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:32 IST)

எனக்கும் அனுஷ்காவிற்கும் காதல் இருக்குமோ? பிரபாஸ் சஸ்பென்ஸ்!!

பாகுபலி படத்தில் நடித்தன் மூலம் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் திரைப்படத்தில் சிறந்த ஜோடியாக கருதப்படுகின்றனர். 


 
 
ரசிகர்கள் அவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இருவருக்கும் மத்தியில் காதல் உள்ளது என செய்திகள் வெளியானது.
 
இதோடு நிற்காமல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இதனை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரபாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில், அனுஷ்கா கடந்த 9 ஆண்டுகளாக எங்களின் குடும்ப நண்பராக உள்ளார். அவருக்கும் எனக்கும் இடையே காதல் இல்லை. 
 
ஆனால் மற்றவர்கள் பேசுவதை பார்க்கும்போது ஒரு வேளை காதல் இருக்குமோ என்று எனக்கே சந்தேகம் வந்ததுண்டு என தெரிவித்துள்ளார்.
 
நேற்று பிரபாஸ் பிறந்தநாளுக்கு அனுஷ்கா ஒரு டிசைனர் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.