வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (16:38 IST)

கோஹ்லிக்கு ஓய்வு ? – பிசிசிஐ யோசனை !

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் நடக்க இருக்கும் டி 20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கபடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி நவம்பர் மாதம் வங்கதேச அணியுடன் 3 டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் இரண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குள் வருவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்திய அணிக்குத் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வருவதால் அவருக்கு டி 20 தொடரில் ஓய்வளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் அடுத்த ஆண்டு டி 20 உலகக்கோப்பை வருவதால் அதற்கு இளம்வீரர்களைத் தேர்வு செய்யும் விதமாக அந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.