1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:05 IST)

தல-தளபதி சந்திப்பின் காரணம் இதுதானா? ரசிகர்கள் குஷி!

தல தோனி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் இன்று திடீரென சந்தித்துக் கொண்டது திரையுலகில் மட்டுமின்றி கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் அதன் பயிற்சிக்காக சென்னை வந்துள்ள தல தோனி திடீரென பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு அவர் விஜய்யுடன் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளம்பர படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும் அதில் விஜய் நடிப்பாரா என்று கேட்பதற்காக தோனி வந்ததாகவும் கூறப்படுகிறது 
 
தோனியின் வேண்டுகோளை ஏற்று விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  இன்னும் ஓரிரு நாட்களில் இதன் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தோனி மற்றும் விஜய் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரப்படத்தில் காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது