வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (00:14 IST)

'பஞ்சாப் கொடுத்த இமாலய இலக்கை நெருங்கி தோல்வி அடைந்த மும்பை

ஐபிஎல் 2017 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நேற்றுடன் 50 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று (11.05.2017) 51வது போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் வென்றால்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது என்பதால் வெறித்தனமாக விளையாடி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது



 


முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சஹா அடித்த அதிரடி 93 ரன்கள் உதவியால் மொத்தம் 230 ரன்கள் குவித்தது. 231 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற கடின இலக்கையும் கிட்டத்தட்ட மும்பை நெருங்கிவிட்டது.

ஆம், மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 223 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தயாராகிவிட்டது என்பதால் இந்த தோல்வி அந்த அணிக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது