செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (08:28 IST)

மாநில அரசுகள் இணைந்து தடுப்பூசி விலையை நிர்ணயிக்க வேண்டும்… ப சிதம்பரம் கருத்து!

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகமாகியுள்ள நிலையில் மாநில அரசுகள் இணைந்து கொரோனா தடுப்பூசியின் விலையை நிர்ணயிக்க வேண்டும்.

இந்தியாவில் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை மத்திய அரசுக்கு 150 ரூ, மாநில அரசுக்கு 400 ரூ மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என விலையேற்றம் செய்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனை எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இப்போது முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் ‘தடுப்பூசிகளுக்கு பல விலைகளை அனுமதிக்கும் அரசின் முடிவு பிற்போக்குத்தனமானது. மாநிலங்கள் இந்த முடிவை நிராகரிக்க வேண்டும். மாநில அரசுகள் எல்லாம் இணைந்து விலை நிர்ணயம் செய்வதற்கான பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து, தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேசி ஒரே விலையை நிர்ணயிக்க  வேண்டும். மாநில அரசுகளில் ஒற்றுமைதான் சீரான விலைக்கு ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தும்.’ எனக் கூறியுள்ளார்.