செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:45 IST)

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது – பாராட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் பவுலர்!

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் பவுலிங் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் கில்லஸ்பி ‘இந்திய அணியின் பவுலிங் இப்போது மிக சிறப்பாக உள்ளது. அதற்காக முந்தைய பவுலர்களை நான் குறை சொல்லவில்லை. பும்ராவின் பவுலிங் அபாராமானது. அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதே போல முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய நல்ல பவுலர்களும் உள்ளனர். புவனேஷ்வர் குமார் விரைவில் காயத்தில் இருந்து மீள்வார் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.