செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (07:23 IST)

டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு: எந்த நாட்டில் தெரியுமா?

டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு: எந்த நாட்டில் தெரியுமா?
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
 
குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக நேற்று அந்நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் ஊரடங்கு உத்தரவை நீடித்து உள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவு டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று அவர் கூறியிருப்பது அந்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது
 
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் டிசம்பர் வரை ஊரடங்கு உத்தரவு நீடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது