புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (17:56 IST)

ஜேம்ஸ் ஆண்டர்சன் நிகழ்த்த இருக்கும் சாதனை – கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது  600 ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்த இன்னும் இரண்டு விக்கெட்களே தேவை.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இப்போது 598 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஆண்டர்சன் இன்னும் 2 விக்கெட்கள் வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள் வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைப்பார்.

தற்போது பாகிஸ்தான் அணியோடு நடந்து கொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  5 விக்கெட்களை வீழ்த்திய ஆண்டர்சன் இன்னும் இரண்டு விக்கெட்களை அடுத்த இன்னிங்ஸிலேயே வீழ்த்தி அந்த சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.