செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (11:07 IST)

அதிக வயதில் 5 விக்கெட்கள்… 70 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஆண்டர்சன்!

இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 39 வயதைக் கடந்தும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் ஆண்டர்சன்தான் அதிக வயதுடையவர். ஆனால் ஒரு 20 வயது இளைஞன் போல சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இது அவரின் 31 ஆவது 5 விக்கெட்டாகும்.

இதன் மூலம் அதிக வயதில் 5 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரிச்சர்ட் ஹார்ட்லியிடம் இருந்து கைப்பற்றியுள்ளார். அவர் 1951 ஆம் ஆண்டு 39 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆனால் ஆண்டர்சன் 39 வயது 14 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆனால் 1931 ஆம் ஆண்டு ஆஸி அணியின் பெர்ட் அயன்மாங்கர் என்ற வீரர் தனது 49 வயதில் இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது