திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (11:00 IST)

டெஸ்ட் போட்டிகளில் 100 நாட் அவுட்… சாதனை படைத்த ஆண்டர்சன்!

டெஸ்ட் போட்டிகளில் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த வீரர்களின் பட்டியலில் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அதையடுத்து இப்போது அவர் மேலும் ஒரு சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். நேற்றைய இன்னிங்ஸில் அவர் 1 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இது அவரின் 100 ஆவது நாட் அவுட் ஆகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் யாருமே செய்யாத சாதனையை அவர் படைத்துள்ளார்.