1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:46 IST)

175 ரன்கள், 9 விக்கெட்டுக்கள்: ஆட்டநாயகன் விருதினை வென்ற ஜடேஜா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்து அபார பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 
 
அதேபோல் அவர் முதல் இன்னிங்சில் இலங்கை அணியின் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தினார். இதனை அடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது