ஜஸ்ட் மிஸ்ஸான ஜட்டுவின் டபுள் செஞ்சுரி… இந்திய அணி டிக்ளேர்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 574 ரன்களில் டிக்ளேர் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று மொகாலியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. நேற்றைய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்த நிலையில் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். இன்று சிற்ப்பாக விளையாடிய ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை அடித்து வேகமாக இரட்டை சதத்தை நோக்கி முன்னேறினார்.
இந்நிலையில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 574 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். ஜடேஜா 175 ரன்களோடு களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார்.