ஐ.எஸ்.ஐ கால்பந்து: கேரள அணி போராடி தோல்வி

Last Modified சனி, 2 நவம்பர் 2019 (22:29 IST)
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று கேரளா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
இந்த போட்டியின் 34வது நிமிடத்தில் கேரளா ஒரு கோல் போட்டு முதல் பாதியில் 0-1 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது. ஆனால் ஐதராபாத் அணி 54வது நிமிடத்திலும் 81வது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டது. அதன்பின் கடைசி வரை கேரளா அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை என்பதால் ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியின் முடிவுக்கு பின் கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், கோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட் மற்றும் மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. சென்னை அணி 10வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :