ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (09:57 IST)

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்து பெண் பயணி காயம்

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை மற்றும் கண்ணாடி விழுந்து நொறுங்குவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. கண்ணாடி விழுந்து நொறுங்குவதில் சதம் அடிக்க சென்னை விமான நிலையம் காத்திருக்கும் நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதே அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று பயணி மீது விழுந்ததில் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்த பெண் பயணி உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது. இதனால் சென்னை விமானம் நிலையம் போல் தொடர்கதை ஆகாமல் உடனடியாக இதுமாதிரி இன்னொரு விபத்து நடக்காவண்ணம் மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.